தமிழகத்தில் ஜன.26ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். ட்விட்டரில் அரசை கடுமையாக சாடிவரும் கமல்ஹாசன், விரைவில் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பல வருடங்களாவே ரஜினி அரசியலுக்கு வருவாரா..? மாட்டாரா..? என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் தான் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி. விரைவில் தனிக்கட்சி தொடங்கி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துபோட்டியிடுட உள்ளதாக ரஜினி தெரிவித்துவிட்டார். அதைப்போலதான் கமல்ஹாசனும் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதற்கேற்ப கமல்ஹாசன் தன் பங்கு காய்களையும் நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில் ஒரு வார பத்திரிகையின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் ஜன.26ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். சுற்றுப்பயண விவரங்கள் ஜனவரி 18ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.