டிரெண்டிங்

என்னைக் கையால் குத்தினர்.... எட்டி உதைத்தனர்: கபில் மிஸ்ரா புகார்

என்னைக் கையால் குத்தினர்.... எட்டி உதைத்தனர்: கபில் மிஸ்ரா புகார்

webteam

என்னைக் கையால் குத்தினார்கள். காலால் எட்டி உதைத்தார்கள் என்று டெல்லியில் பதவி நீக்கப்பட்ட அமைச்சர் கபில் மிஸ்ரா புகார் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதா தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அவரை அடித்து உதைத்தாகப் புகார் தெரிவித்துள்ளார். 
சட்டமன்றத்தில் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து மிஸ்ரா காவலர்களால் வெளியேற்றப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனக்கு அவையில் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே ராமலீலா மைதானத்தில் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். உடனே என்னை நோக்கி ஓடி வந்த ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், என்னைப் பிடித்துத் தள்ளினார்கள். நெஞ்சில் குத்தினர். அடித்து உதைத்தனர். காலால் எட்டி உதைத்தனர். அரவிந்த் கெஜ்ரிவால் அவைக்குள் சிரித்துக் கொண்டிருந்தார் என்று கூறினார்.
டெல்லி ஆம் ஆத்மி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கபில்மிஸ்ராவுக்கும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கபில் மிஸ்ரா அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஊழல் புகார் இருப்பதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனால் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் அவர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவாதகப் புகார் எழுந்து வருகிறது. இம்மாதத் தொடக்கத்தில் கூட அவரது வீடு தாக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.