டிரெண்டிங்

திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் 96-வது பிறந்தநாள்: ஸ்டாலின் வாழ்த்து

Rasus

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தனது 96-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு ஏராளமான திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக பொதுச்செயலாலர் அன்பழகன் தனது 96-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடம் மற்றும் பெரியார் நினைவிடத்தில் அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் கீழ்பாக்கத்திலுள்ள அன்பழகன் இல்லத்தில், அவருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாலையணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் ஏராளமான திமுக தொண்டர்களும் அன்பழகன் இல்லம் வந்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.