டிரெண்டிங்

2ஜி தீர்ப்புக்கு கூடுதல் அவகாசம் தேவையான ஒன்று: சுப்பிரமணியன் சுவாமி

2ஜி தீர்ப்புக்கு கூடுதல் அவகாசம் தேவையான ஒன்று: சுப்பிரமணியன் சுவாமி

webteam

2ஜி வழக்கின் தீர்ப்புக்கு நீதிமன்றம் கூடுதல் அவகாசம் எடுத்துக்கொள்வது தேவையான ஒன்று என, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்‌. 

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு தேதியை அறிவிப்பதாக நீதிபதி சைனி தெரிவித்திருந்தார். எனவே இன்றைய தினம் தீர்ப்பு தேதி தெரியவரும் என்ற நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2ஜி வழக்கின் ஆவணங்கள் பல பக்கங்கள் கொண்டதாக இருப்பதால் தீர்ப்பை தயாரிக்க அவகாசம் தேவைப்படுவதாக நீதிபதி சைனி இன்று தெரிவித்தார். தீர்ப்பு தயாராக 2 அல்லது 3 வாரங்கள் வரை ஆகும் என்பதால், டிசம்பர் 5ஆம் தேதி தீர்ப்பு தேதியை அறிவிப்பதாக நீதிபதி கூறினார். 

2ஜி முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, வழக்கு விசாரணையை பார்வையிட சிபிஐ நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். 
அவர் கூறும்போது, 2ஜி வழக்கின் தீர்ப்புக்கு நீதிமன்றம் கூடுதல் அவகாசம் எடுத்துக்கொள்வது தேவையான ஒன்று என்றும் அரசியல் ரீதியாக பல மாற்றங்களை ஏற்படுத்திய வழக்கு என்பதால் இந்த கால அவகாசம் அவசியமானது என்றும் கூறினார்.