டிரெண்டிங்

ரஜினியின் வருகை திராவிட அரசியலை மாற்றும்: குருமூர்த்தி

ரஜினியின் வருகை திராவிட அரசியலை மாற்றும்: குருமூர்த்தி

Rasus

ரஜினியின் அரசியல் வருகை,  தமிழகத்தில் 60 ஆண்டு காலமாக உள்ள திராவிட அரசியலில் பல அடுக்கு மாற்றங்களை ஏற்படுத்தும் என மூத்த பத்திரிகையாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பலத்த எதிர்பார்ப்புக்கிடையே அரசியலில் ஈடுபடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் முன்னிலையில் இதனை அவர் அறிவித்தார். மேலும், தனிக்கட்சி தொடங்கி, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இப்போது அரசியல் கெட்டுப் போயிருப்பதாகவும், ஜனநாயகம் சீர்கெட்டுக் கிடப்பதாகவும் கூறிய அவர், ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட ஆன்மிக அரசியலை கடைபிடிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினியின் வருகை திராவிட அரசியலை மாற்றும் என மூத்த பத்திரிகையாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் 60 ஆண்டு காலமாக உள்ள திராவிட அரசியலில், ரஜினியின் அரசியல் வருகை பல அடுக்கு மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். மேலும் ரஜினி தெரிவித்துள்ள ஆன்மிக அரசியல், தமிழகத்திலும் வெளிமாநிலங்களிலும் இல்லாத அளவு பிரதமர் மோடியின் அரசியலுக்கு நெருக்கமானதாக கருதலாம் என்றும் கூறியுள்ளார்.