டிரெண்டிங்

ஓவைசி கட்சியின் மேற்கு வங்கத் தலைவர் கட்சியிலிருந்து விலகல்: மம்தாவுக்கு ஆதரவு?

ஓவைசி கட்சியின் மேற்கு வங்கத் தலைவர் கட்சியிலிருந்து விலகல்: மம்தாவுக்கு ஆதரவு?

Veeramani

மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்க சில தினங்களே உள்ள நிலையில், அம்மாநில ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் ஜமிருல் ஹசன், கட்சியை விட்டு விலகியுள்ளார். இது அசாதுதீன் ஒவைசிக்கு ஒரு பின்னடைவாக அமைந்திருக்கிறது.

நந்திகிராமில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவை வழங்கிய 'இந்தியன் நேஷனல் லீக்கில்' அவர் இணைவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஓவைசியால் 'புறக்கணிக்கப்பட்டதால்' ஹசன் கட்சியில் அதிருப்தியில் இருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

"நான் ஏஐஎம்ஐஎம் இல் 2015 இல்  சேர்ந்தேன். கட்சியை மாநிலத்தின் 20 மாவட்டங்களுக்கு பரப்ப கடுமையாக உழைத்தேன். உண்மையில், மம்தா பானர்ஜியும் ஏஐஎம்ஐஎமை குறிவைத்து பல கட்சி உறுப்பினர்களைக் கூட கைது செய்தார். இருந்தாலும், ஒவைசி இதற்காக ஒருபோதும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக்கூட நடத்தவில்லை, எங்களைப் பற்றி எதுவும் பேசவில்லை , "என்று அவர் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் (டிஎம்சி) இடையிலான இருமுனை போட்டியாக பார்க்கப்படுகின்றன. தேர்தல்கள் மார்ச் 27 முதல் எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் மே 2 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.