நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். நேற்று தனது 56வது பிறந்தநாளைக் கொண்டாடிய அவருக்கு அதே கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அடுத்த பிறந்த நாளை வெள்ளை மாளிகையில் கொண்டாடுவோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இருவரும் கைகோர்த்துள்ள ஒரு புகைப்படத்தையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த டிவீட்டில், ‘’ஹேப்பி பர்த்டே கமலா ஹாரிஸ். அடுத்த ஆண்டு ஐஸ்க்ரீமுடன் வெள்ளை மாளிகையில் கொண்டாடலாம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த ஹாரிஸ், ‘’என்னுடைய பிறந்தநாள் ஆசை என்னவென்றால் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்கவேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். மேலும் அடுத்த மாதம் பிறந்தநாள் கொண்டாடவுள்ள தனது சகோதரி மீனா ஹாரிஸுக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஹிலாரி க்ளிண்டன் உட்பட பலரும் கமலாவுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் துணை அதிபர் பதவிக்கு வேட்புமனுதாக்கல் செய்துள்ள கமலா ஹாரிஸ், இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற அந்தஸ்தைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் பைடனும் தனது 78வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார்.