டிரெண்டிங்

எதிர்ப்புக்கு மத்தியில் பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு

எதிர்ப்புக்கு மத்தியில் பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு

Rasus

எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு இடையே சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.

பேரவை அரங்கில் ஏற்கனவே 10 தலைவர்களின் உருவப் படங்கள் உள்ள நிலையில், 11ஆவதாக ஜெயலலிதாவின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது. அதை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

7 அடி உயரம், 5 அடி அகலம் கொண்ட ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை சூடப்பட்டிருந்தது. படத்திறப்பு நிகழ்ச்சியை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். இதையடுத்து, பேரவை அரங்கில் திமுகவினருக்கான இருக்கைகளில் அதிமுக எம்பிக்கள் அமர வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கவின் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மதியழகன் ஜெயலலிதாவின் உருவப் படத்தை வரைந்துள்ளார்.