டிரெண்டிங்

மூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன?

Rasus

மூச்சுத் திணறலுடன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் 2016 செப்.27-ஆம் தேதி ஜெயலலிதா மூச்சுத் திணறலுடன் பேசிய 52 விநாடிகள் கொண்ட ஆடியோ பதிவு விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆடியோ பதிவை மருத்துவர் சிவக்குமார் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த ஆடியோவில்தான் மூச்சுத் திணறலை உணர்ந்தது எப்படி என ஜெயலலிதா பேசுகிறார். அந்த ஆடியோவில் ஜெயலலிதா பேசியதாவது:-

ஜெயலலிதா:- பதிவு செய்வது சரியாக கேட்கிறதா..?

மருத்துவர் சிவக்குமார்: சிறப்பாக இல்லை; அப்ளிகேஷன் டவுன்லோடு செய்கிறேன்

ஜெயலலிதா: எடுக்க முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள்.

மேலும் ஜெயலலிதா பேசும்போது- திரையரங்கில் முதல் வரிசையில் இருக்கும் ரசிகன் விசில் அடிப்படை போல என மூச்சுத் திணறல் உள்ளது என்கிறார். மேலும் மருத்துவரிடம் தனக்கு இரத்த அழுத்த அளவு எவ்வளவு உள்ளது என கேட்கிறார். அதற்கு அப்போலோ மருத்துவர் அர்ச்சனா, 140/80 இருக்கிறது என்று பதிலளிக்கிறார். உடனே அது தனக்கு நார்மல் தான் என ஜெயலலிதா கூறுகிறார். மொத்தமாக 52 விநாடிகள் கொண்டதாக இந்த ஆடியோ உள்ளது.