டிரெண்டிங்

முட்டாள் தனத்தில் இருந்து வெளியே வாருங்கள் - வரலட்சுமி சரத்குமார்

முட்டாள் தனத்தில் இருந்து வெளியே வாருங்கள் - வரலட்சுமி சரத்குமார்

webteam

ஒரு படத்தின் மூலம் பயப்படுகிறீர்களே அந்த அளவுக்கு இந்த அரசாங்கம் பலவீனமானதாக உள்ளதா என ’சர்கார்’ படத்தில் நடித்த வரலட்சுமி சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தி வந்தனர்.  

மேலும் அனுமதி வாங்காமல் பேனர் வைத்ததாக கூறி பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தியேட்டர் உரிமையாளர் சங்கம் ஒப்புதல் அளித்தது. அதற்கான செயல்பாடுகள் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிகிறது.  

’சர்கார்’ திரைப்படத்தில் இருந்து மிக்ஸி, க்ரைண்டர், ஃபேன் ஆகியவற்றை தூக்கி நெருப்பில் எரியும் காட்சி மற்றும் வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயர் கோமளவல்லி என்பதை ஆடியோ கட் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், ஒரு படத்தின் மூலம் பயப்படுகிறீர்களே அந்த அளவுக்கு இந்த அரசாங்கம் பலவீனமானதாக உள்ளாதா என ’சர்கார்’ படத்தில் நடித்த வரலட்சுமி சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

காலித்தனம் செய்து உங்களை நீங்களே அசிங்கப்படுத்தி கொள்கிறீர்கள் எனவும் தயவு செய்து அந்த முட்டாள் தனத்தில் இருந்து வெளியே வாருங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். திரைப்படம் என்பது படைப்பாற்றல் சுதந்திரம் எனவும் வரலட்சுமி வலியுறுத்தியுள்ளார்.