டிரெண்டிங்

கூவத்தூரில் வருமானவரித்துறை சோதனை நடத்தியிருக்க வேண்டும்: ஓபிஎஸ் பேட்டி

கூவத்தூரில் வருமானவரித்துறை சோதனை நடத்தியிருக்க வேண்டும்: ஓபிஎஸ் பேட்டி

Rasus

கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வரும் 8-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடக்க உள்ளதை முன்னிட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேர் பெங்களூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தைத் தொடர்புபடுத்தி செய்தியாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என கூறினார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த விடுதியில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.