நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கர விழாவில் முதலமைச்சர் பழனிசாமி புனித நீராடினார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகாபுஷ்கரம் விழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 24-ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் பழனிசாமி, மகா புஷ்கர விழாவில் புனித நீராடினார். அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் புஷ்கர விழாவில் புனித நீராடினர்.
முதலமைச்சர் வருகையையொட்டி, ஐஜி, டிஐஜிக்கள் தலைமையில் சுமார் 5 ஆயிரம் காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனையடுத்து, நாகையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் கலந்துகொள்ள உள்ளார்.