டிரெண்டிங்

வாக்குச்சாவடிக்கு உதயசூரியன் பொறித்த புடவை அணிந்துவந்த பெண்களை திருப்பி அனுப்பிய போலீஸ்

வாக்குச்சாவடிக்கு உதயசூரியன் பொறித்த புடவை அணிந்துவந்த பெண்களை திருப்பி அனுப்பிய போலீஸ்

JustinDurai

சிவகாசி 26-வது வார்டு பகுதியில் வாக்கு அளிக்க பெண்கள் உதயசூரியன் சின்னம் பொறித்த புடவை அணிந்து வந்ததால் அவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிவகாசியில் 26வது வார்டு பகுதியில் வாக்கு அளிக்க வந்த பெண்கள், உதயசூரியன் சின்னம் பொறிந்த புடவை அணிந்து வந்திருந்தனர். இதனையடுத்து அந்த பெண்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 111 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்: சென்னையில் பூத் சிலிப்புடன் அதிமுக பணம் விநியோகம்: திமுக குற்றச்சாட்டு