டிரெண்டிங்

புதுச்சேரி: சட்டப்பேரவை தேர்தலையொட்டி 48 மணி நேரத்திற்கு 144 தடை உத்தரவு!

JustinDurai

புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் வழக்கமான திருமண நிகழ்ச்சிகள், மதசடங்குகள் போன்றவற்றிக்கு தடை இல்லை எனவும் மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார். இதன்படி, நாளை இரவு 7 மணி முதல் வரும் 7-ம் தேதி காலை 7 மணிவரை இரு சக்கர வாகன பேரணிகள் தடை செய்யப்படுள்ளது.

நாளை இரவு 7 மணி முதல் வரும் 7-ம் தேதி காலை 7 மணி வரை கூட்டமாக கூடுதல், பொதுக்கூட்டங்கள் நடத்துவது, பதாகைகளை ஏந்திச்செல்வது, கோஷமிடுவது, ஒலிப்பெருக்கியினை பயன்படுத்துவது ஆகியவை முற்றிலும் தடை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என்றும் உள்ளூர் போலீஸ் பாதுகாப்புடன், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் ஆட்சியர் குறிப்பிட்டார். புதுச்சேரியில் இதுவரை 42 கோடியே 12 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணம், நகை, பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.