டிரெண்டிங்

கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தினால் குற்றம்: பிரதமர் மோடி

கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தினால் குற்றம்: பிரதமர் மோடி

rajakannan

சமூகத்தின் மனசாட்சியாக ஊடகத்தின் பேனா முனை இருந்து வருகிறது என்றும் கருத்துச் சுதந்திரத்தை ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தினால் அது குற்றம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

தினத்தந்தி நாளிதழின் பவளவிழா கொண்டாட்டம் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் பன்சாரிலால் கலந்து கொண்டனர். 2017ஆம் ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசை ஈரோடு தமிழன்பனுன்,  வெ.இறையன்பு ஐஏஎஸ் ஆகியோருக்கு பிரதமர் மோடி வழங்கினார். 


தமிழில் வணக்கம் கூறி உரையாற்ற தொடங்கிய மோடி, பவள விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி என்றும் தமிழில் தெரிவித்தார். பின்னர் பேசிய மோடி, சென்னையில் பத்திரிக்கையாளர் மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். 

மேலும் அவர் பேசுகையில், 75 ஆண்டுகால சாதனையை நிகழ்த்தி காட்டிய தினத்தந்தி நிர்வாகம், ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். தமிழகம், பிறமாநிலங்கள், வெளிநாடு என 17 பதிப்புகளில் தினத்தந்தி வெளிவந்து மாபெரும் சாதனை புரிந்துள்ளது. 24மணி நேரமும் செய்தி தொலைக்காட்சிகள் மக்களுக்கு கிடைத்து வருகிறது ஆனாலும் காலையில் தேநீருடன் பத்திரிகை படிப்பதை மக்கள் நிறுத்தவில்லை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பல பத்திரிக்கைகள் சுதந்திரம் கிடைக்க காரணமாக இருந்தன. பிராந்திய மொழி பத்திரிகைகளை பார்த்து ஆங்கிலேயர்கள் அச்சம் கொண்டனர்.

தொழில்நுட்பம் ஊடகத்தில் மாபெரும் மாறுதல்களை கொண்டு வந்துள்ளது. சமூகத்தின் மனநிலையை சரியாக எடுத்துக் காட்டுபவை ஊடகங்கள். சமூகத்தின் மனசாட்சியாக ஊடகத்தின் பேனா முனை இருந்து வருகிறது. ஊடகங்கள் நம்பகத்தன்மையை எப்போதும் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் நன்மைக்காக பத்திரிக்கை சுதந்திரம் பயன்படுத்தப்பட வேண்டும். கருத்து சுதந்திரத்தை பத்திரிகைகள் தவறாக பயன்படுத்துவது குற்றமாகும். 2022ஆம் ஆண்டு நாம் புதிய இந்தியாவைக் கான வேண்டும். பருவநிலை மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஊடகங்கள் ஏற்படுத்தி வருகின்றன. ஊடகங்களின் கவனம் அரசை சுற்றியே உள்ளது, அதே கவனம் 125 கோடி மக்களை சுற்றியும் இருக்க வேண்டும் என்றார்.
தமிழக மழை குறித்துப் பேசிய மோடி வெள்ள நிவாரணம் தொடர்பாக தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று கூறினார்.