டிரெண்டிங்

ராகுல் காந்தியின் செயலை பாராட்டாதவர்கள் ஏன் கட்சியில் இருக்கிறார்கள்?: திக் விஜய சிங்

ராகுல் காந்தியின் செயலை பாராட்டாதவர்கள் ஏன் கட்சியில் இருக்கிறார்கள்?: திக் விஜய சிங்

webteam

இந்தியாவின் நலனிற்காக நிற்கும் ராகுல் காந்தியையும் பிரியங்கா காந்தியையும் பாராட்டாத தலைவர்கள் ஏன் காங்கிரஸில் இருக்கிறார்கள் என திக் விஜய சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள அவர், “ காங்கிரஸ் கட்சியின் தலைமையானது கட்சியை படிப்படியாக முன்னேற்றும் சவாலை ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கு தான் நமக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரின் சுறுசுறுப்பு மிகுந்த தலைமை தேவைப்படுகிறது. பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் எதிர்கொள்ளத் தேவையான தைரியமும், துணிச்சலும் இவர்கள் இருவரிடமும் இருக்கின்றன” என அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.


மேலும் “ இந்தியாவின் நலனுக்காகவும் உத்தரப்பிரதேச நலனுக்காகவும் போராடும் ராகுல் காந்தி மற்று பிரியங்கா காந்தி ஆகியோரின் முயற்சிகளுக்கு நான் துணை நிற்கிறேன் என்றும் இவர்களின் முயற்சிகளை பாராட்டாத காங்கிரஸ் தலைவர்கள் ஏன் காங்கிரஸில் இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல்காந்தி தலைவராக இருந்தபோது நடந்த 2019  தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னரும் ராகுல் காந்தி பல செயற்பாடுகளை முன்னெடுத்தார். இந்த செயற்பாடுகள் நம்பிக்கை தரும் விதமாக இருக்கிறது என்பதைக் குறிப்பிடும் வகையில் அவர் இதனை பதிவிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.