டிரெண்டிங்

"சேவை செய்யவில்லை எனில் செருப்பால் அடிங்க"-ராதாபுரம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் பரப்புரை

"சேவை செய்யவில்லை எனில் செருப்பால் அடிங்க"-ராதாபுரம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் பரப்புரை

kaleelrahman

வெற்றி பெற்று சேவை செய்யவில்லை எனில் செருப்பால் அடிங்க என சுயேச்சை வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 19 பேர் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவரான இடையன்குடி அருகே உள்ள இலக்கரிவிளை என்னும் கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த வேட்பாளர் சேர்மத்துரை, காலணி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் காலணி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சேர்மதுரை தனது சின்னமான காலணியை (செருப்பை) தனது கழுத்தில் தொங்க விட்டபடி பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து திசையன்விளை வாரச்சந்தையில் சுயேச்சை வேட்பாளர் சேர்மத்துரை வாக்கு சேகரித்தார்.

பொதுமக்களிடமும், மீன் கடை ,பழக்கடை, காய்கனி கடை வியாபாரிகளிடமும் தேர்தல் வாக்குறுதி அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை  கொடுத்தும் வாக்கு சேகரித்த அவர், 'தான் வெற்றிபெற்று சேவை செய்யவில்லை எனில் செருப்பால் அடிங்க ' எனவும் நூதனமான முறையில் வாக்குகளை சேகரித்தார்.