டிரெண்டிங்

மத்திய அரசுடன் போராடி 3 ஆண்டுகளில் எய்ம்ஸை கொண்டுவருவேன் - எம்எல்ஏ ராஜன்செல்லப்பா

மத்திய அரசுடன் போராடி 3 ஆண்டுகளில் எய்ம்ஸை கொண்டுவருவேன் - எம்எல்ஏ ராஜன்செல்லப்பா

kaleelrahman

திருப்பரங்குன்றத்தில் கண்டிப்பாக மயில்களுக்கு தனியாக சரணாலயம் அமைக்கப்படும். விமான நிலையத்தை விரிவுபடுத்துவேன் என அடுக்கடுக்கான வாக்குறுதிகளை திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா மக்களுக்கு கொடுத்தார்.

திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பாலாஜி நகர், ஹார்விபட்டி பகுதியில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவரை பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.

பின்னர் மக்களிடையே பரப்புரை மேற்கொள்ளும போது திருப்பரங்குன்றத்தில் கண்டிப்பாக மயில்களுக்கு தனியாக சரணாலயம் அமைக்கப்படும். என வாக்குறுதி அளித்தார். மத்திய அரசுடன் போராடியாவது மூன்று ஆண்டுகளில் கண்டிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனையை முடித்துக் காட்டுவேன் என்றும் சாவால் விட்டார்.