டிரெண்டிங்

விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை: நாஞ்சித் சம்பத்

விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை: நாஞ்சித் சம்பத்

webteam

என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை, அதனால் தான் வெளியேறினேன் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நாஞ்சில் சம்பத், “இன்னல் சூழ்ந்த காலகட்டத்தில் டிடிவி தினகரனுக்கு துணை நின்றேன், தோள் கொடுத்தேன். அநியாயமாக அவர் பழி வாங்கப்பட்டப் பொழுது அவருக்கு பக்கபலமாகவும், தக்க துணையாகவும் இருக்க தீர்மானித்தேன். அவரை சிகரத்திற்குக் கொண்டுச்செல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் என்னைப் பார்த்தார்கள். என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை, அதனால்தான் கவலையோடு வெளியேறினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக புதியதலைமுறையிடம் நேற்று பேசிய நாஞ்சில் சம்பத், டிடிவி அணியில் இருந்து தான் விலகிவிட்டதாக அறிவித்தார். திராவிடம் எனும் மூலதனத்தையும், அண்ணா எனும் மூலவரையும் தினகரன் அலட்சியப்படுத்தியதாகக் கூறிய நாஞ்சில் சம்பத், கொள்கை திரவியத்தைக் கொட்டிக் கவிழ்த்துவிட்டதாகவும், ஒரு பச்சைப் படுகொலையை தினகரன் நிகழ்த்திவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், இனி மீண்டுமொருமுறை இந்த தவறை செய்யமாட்டேன் எனக் கூறிய நாஞ்சில் சம்பத், எந்த கட்சியிலும் இணையப்போவதில்லை எனத் தெரிவித்தார். தான் கொண்டாடிய தலைவன் தினகரன் எனக்கூறிய அவர், தற்போது மோசம் செய்துவிட்டார் என்றும் குற்றம்சாட்டினார்.