டிரெண்டிங்

“தனிப்பட்ட முறையில் முத்தலாக் சட்டத்தை ஆதரிக்கிறேன்” - ரவீந்திரநாத் குமார் 

“தனிப்பட்ட முறையில் முத்தலாக் சட்டத்தை ஆதரிக்கிறேன்” - ரவீந்திரநாத் குமார் 

rajakannan

முத்தலாக் சட்டத்தை தனிப்பட்ட முறையில் தான் ஆதரிப்பதாக அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார்.

முத்தலாக் தடை மசோதா மீதாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்ற போது, மக்களவையில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் ஆதரவாக வாக்களித்தார். ஆனால், மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் அனைவரும் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். அதிமுக முத்தலாக் மசோதா விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு எடுத்ததாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தனர். 

இந்நிலையில், முத்தலாக் சட்டத்தை தனிப்பட்ட முறையில் தான் ஆதரிப்பதாக ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார். மேலும், ‘மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது பற்றி யோசித்து பார்த்தது கூட இல்லை; தலைமையின் முடிவுதான் இறுதியானது’  என்று கூறினார்.