டிரெண்டிங்

”எலே பாத்ரூம் செப்பல் எவ்ளோ பெறும்?” - 54% ஆஃபர்.. EMI.. எல்லாம் உண்டு: ஆனா விலை தெரியுமா?

”எலே பாத்ரூம் செப்பல் எவ்ளோ பெறும்?” - 54% ஆஃபர்.. EMI.. எல்லாம் உண்டு: ஆனா விலை தெரியுமா?

JananiGovindhan

நவீன உலகம் என்னதான் முன்னேறி இருந்தாலும் இன்றளவும் செல்வந்தர்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் பலவும் எளியோர்களால் பயன்படுத்த முடியாத நிலையே இருக்கின்றன. அதேவேளையில், எளியவர்கள் உபயோகிக்கும் பொருட்கள் பலவற்றை ஆடம்பர பொருட்களாக பாவித்து அதனை பல ஆயிரங்களில் விற்கும் நிறுவனங்களும் இருக்கின்றன.

அந்த வகையில் Hugo boss என்ற தளத்தில் சாமானியர்கள் அணியும் ஹவாய் செப்பல் என சொல்லக்கூடிய காலணியை ₹8,990 ரூபாய்-க்கு விற்கப்படுவதாகவும் அதன் உண்மையான விலை 19 ஆயிரத்து 500 ரூபாய் என்றும் 54 சதவிகித தள்ளுபடி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதுபோக அந்த ஃப்ளிப் ஃப்ளாப் செப்பலை இ.எம்.ஐ. எனும் தவணை முறையிலும் வாங்கலாம் என்ற அம்சத்தையும் ஹூகோ பாஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. hugo boss போன்ற தளங்களில் சாதாரணமாக மக்கள் அணியக்கூடிய சில அணிகலன்கள் கூட பல ஆயிரங்களில் விற்கப்படுகின்றன. அதில் ஒன்றுதான் இந்த செப்பலும்.

இது தொடர்பான விளம்பரத்தை கண்ட பயனர் ஒருவர் அதிர்ச்சியடைந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அந்த பதிவு வைரலாகி நெட்டிசன்கள் பலரை ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக்கியிருக்கிறது. அதன்படி, “இது பாத்ரூம் செப்பல் டூட்” , “வெறும் 150 ரூபாய் விலைகொண்ட இந்த செருப்பு 9,000க்கு விற்கப்படுகிறதா? அதுவும் ஆஃபருடன்” என அந்த போஸ்ட்டை ரீட்வீட் செய்து வருகிறார்கள்.