டிரெண்டிங்

“கொரோனா விதிமுறைகளை உறுதி செய்யுங்கள்” - தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

Sinekadhara

தேர்தல் நடவடிக்கைகளின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்யவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொண்டன் சுப்ரமணி என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் தேர்தல் பரப்புரை மற்றும் வாக்குப்பதிவின்போது கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்ற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, கொரோனா இரண்டாம் அலை போன்று பரவ தொடங்கியிருப்பதாகவும், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் பொறுப்பாக் செயல்படவேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் கொரோனா தடுப்பு விதிகள் குறித்து வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் எனவும் அறிவுத்தினர். அதேபோல் மக்கள் கூடுகிற தேர்தல் நாளன்றும் கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை முறையாக உறுதி செய்யவேண்டும் எனவும், இதுகுறித்த விளம்பரங்களை வெளியிட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.