டிரெண்டிங்

விவசாயிகளுக்காக ராஜினாமா செய்ததில் பெருமையாக உள்ளது: ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

விவசாயிகளுக்காக ராஜினாமா செய்ததில் பெருமையாக உள்ளது: ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

sharpana

விவசாயிகள் தொடர்பான மூன்று மசோதாக்களை எதிர்த்து மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், ’விவசாயிகளுக்கு எதிரான கட்டளைகளுக்கும் சட்டஞ்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சரவையிலிருந்து விலகியுள்ளேன். விவசாயிகளுடன் தங்கள் மகள் சகோதரியாக நிற்பதில் பெருமயாக’ உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று மாநிலங்களவையில் ’அத்யாவசிய பொருட்கள் மசோதா, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா, விலைவாசி தொடர்பான விலை நிர்ணயம் மசோதா’ ஆகியவை வாக்கெடுப்புக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ள இந்த மசோதாக்களை நிறைவேற்றக்கூடாது என்று எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் இதைனை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த மசோதாவுக்கு ஆதரவாக பஞ்சாப் எம்.பிக்கள் வாக்களித்தால் ஊருக்குள் விடமாட்டோம் என்று விவசாயிகளும் எச்சரித்தனர். இதனால், பஞ்சாபின் முக்கிய கட்சியும் பாஜகவின் கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலிதளம் கட்சியும் கடந்த வாரம் இதனை எதிர்த்து வாக்களித்துள்ளது. இந்நிலையில், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் சிரோமணி அகாலிதளம் கட்சியின் மத்திய அமைச்சராக உள்ள ஹர்சிம்ரத் கவுர் பாதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று அக்கட்சியின் தலைவரும், ஹர்சிம்ரத் கவுர் பாதலின் கணவருமான சுக்பீர் சிங் பாதல் தெரிவித்திருந்தார். அவர் கூறியதுபோலவே தற்போது பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்.