டிரெண்டிங்

2ஜி வழக்கில் அனைவரும் விடுதலையானது மகிழ்ச்சி: டிடிவி தினகரன்

2ஜி வழக்கில் அனைவரும் விடுதலையானது மகிழ்ச்சி: டிடிவி தினகரன்

webteam

தமிழர்களாக இருந்து 2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை பெற்றது மகிழ்ச்சி என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி இருப்பது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தீர்ப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலர், பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன்,  2 ஜி வழக்கில் அனைவரும் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். மேலும், எதிர்க்கட்சி என்பதால் சிறைக்கு செல்லவேண்டும் என்று நினைக்கவில்லை என கூறிய அவர், தமிழகர்களாக இருந்து வழக்கில்  விடுதலை பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்தார். தீர்ப்பை வரவேற்று திமுக ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.