டிரெண்டிங்

தமிழை வளர்த்தது யார்? ஹெச்.ராஜா ட்வீட்

தமிழை வளர்த்தது யார்? ஹெச்.ராஜா ட்வீட்

webteam

தமிழை வளர்த்தது ஆன்மீகப் பெரியோர்கள் தான் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் வைரமுத்து வாசித்த கட்டுரைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையான வார்த்தைகளால் வைரமுத்துவை விமர்சித்தார். ஹெச்.ராஜாவின் இந்த விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் பேசி வருகின்றனர். குறிப்பாக நேற்று வைரமுத்துவிற்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழை எளிமைப்படுத்திய கவிஞனை ஹெச்.ராஜா இழிசொற்களால் எப்படி பேசலாம்? என்றும், வைரமுத்து என்பவர் தனிமனிதரல்ல தமிழினத்தின் பெரு அடையாளம் என்றும் கூறியிருந்தார். மேலும் வைரமுத்து போல், ஹெச்.ராஜாவால் இலக்கியம் படைக்க முடியுமா என்றும், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் இரட்டை காப்பியங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். தமிழை திசைகள் தோறும் தெரியப்படுத்தியவர் வைரமுத்து என்றும் புகழாரம் சூட்டியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ட்வீட்டரில் பதிவிட்டுள்ள ஹெச்.ராஜா, “தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், கம்பராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றை தந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும், கம்பனும், இந்து ஆன்மீக பெரியோரும் தான் தமிழ் வளர்த்தனர். வேலைக்காரி, ஓடிப்போனவள், போலீஸ்காரன் மகள் ஆகியவற்றை எழுதியவர்கள் அல்ல. தமிழ் இளைஞர்கள் சிந்தனைக்கு.” என்று கூறியுள்ளார்.