டிரெண்டிங்

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ பொய்யானது: ஹெச்.ராஜா

Rasus

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற பொய்யான வீடியோவை வெளியிட்டுள்ளதாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ வெளியாகி உள்ளது. டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இதனை வெளியிட்டுள்ளார். இதனிடையே தேர்தல் விதிகளை மீறி ஜெயலலிதா குறித்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற பொய்யான வீடியோவை வெளியிட்டுள்ளதாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா சிகிச்சை வீடியோ உண்மையாக இருந்தால் விசாரணை கமிஷனிடம் கொடுத்திருக்க வேண்டும் எனக் கூறிய ஹெச்.ராஜா, வீடியோ வெளியிட்டது தேர்தல் விதிமீறலா என்பது குறித்து ஆணையம் விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை என அப்போலோ தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. இருப்பினும், அந்த வீடியோ ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோதான் என்றும் அப்போலோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.