டிரெண்டிங்

குஜராத் மாநிலங்களவை தேர்தல்: வாக்கு எண்ணிக்கையில் சிக்கல்

webteam

குஜராத் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மாலை தொடங்கியது. அப்போது, காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இருவர் தங்களுடைய வாக்குச்சீட்டை, கொறடா அல்லாதவர்களிடம் காட்டியதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களவை தேர்தலில் கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கவோ, வாக்குச்சீட்டை கொறடா அல்லாத ஒருவரிடம் காட்டுவதோ தேர்தல் விதி 39, 1961-ன் படி சட்டப்படி குற்றம் ஆகும். இன்று குஜராத் மாநிலங்களவை தேர்தலில் வாக்களித்த காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இருவர் தங்களுடைய வாக்குகளை அமித்ஷாவிடம் காட்டியதாகத் தெரிகிறது.

இதனால் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளது. நடந்த சம்பவம் தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. சட்டப்படி அந்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்டித்து, காங்கிரஸ் வாக்கு எண்ணும் பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறது.