டிரெண்டிங்

வெற்றிச்சின்னம் காட்டினார் மோடி... இமாச்சல், குஜராத்தில் வெற்றிமுகத்தில் பாஜக

webteam

குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகம் வந்த பிரதமர் மோடி வெற்றிச்சின்னம் காட்டினார்.

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 182 சட்டசபை உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதேபோல் 68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இரண்டு தேர்தல்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி குஜராத்தில் பாஜக 108 தொகுதிகளிலும், காங்கிரஸ் 73 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக 42 இடங்களிலும், காங்கிரஸ் 23 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடி, வெற்றி சின்னமான இரட்டை விரலை காட்டினார். இந்நிகழ்வு பாஜக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.