முந்தைய காங்கிரஸ் அரசின் கொள்கைகள் சரியான திசையில் பயணிக்காததால் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லவில்லை குஜராத் முதலமைச்சர் வியஜ் ருபானி விமர்சித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் வேலை வாய்ப்பு பெருகவில்லை என்று காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் குஜராத் முதலமைச்சர் வியஜ் ருபானி. முந்தைய காங்கிரஸ் அரசின் கொள்கைகள் சரியான திசையில் பயணிக்காததால் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லவில்லை என்று கூறிய அவர், இது தொடர்பான விவாதத்திற்குத் தயார் என்றும் கூறியுள்ளார். குஜராத்தில் வேலை வாய்ப்பு பெருகியுள்ளது என்பதை தன்னால் உறுதியாகக் கூற முடியும் என்றும் விஜய் ருபானி தெரிவித்தார்.