டிரெண்டிங்

அரசியல் செய்கிறார் ஆளுநர்: ஸ்டாலின் சாடல்

Rasus

தமிழகத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அரசியல் செய்வதாக எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இப்போது உட்கட்சி விவகாரம் என்கிறார் ஆளுநர். ஏற்கனவே ஓபிஎஸ் வெறும் 10 எம்எல்ஏ-க்களை வைத்து கொண்டு சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என்று சொன்ன போது, பேரவையை கூட்ட உடனே உத்தரவிட்டார். அப்போது உட்கட்சி விவகாரம் என்று தெரியவில்லையா..? அதுதான் என் கேள்வி..? ஆளுநர் நிச்சயமாக அரசியல் பண்ணுகிறார். ஏனென்றால், மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சி, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை பயன்படுத்தி ஆட்சியில் இருப்பவர்களை மிரட்டி பணிய வைத்திருக்கிறது. அதற்கு பணிந்து இந்த ஆட்சியும் நடந்து கொண்டிருக்கிறது. பிரிந்தவர்களை ஒன்றாக இணைக்க பல முயற்சி எடுத்து அதற்கு ஆளுநரை பயன்படுத்திய காட்சிகளை பார்த்து இருப்பீர்கள். ஆகவே பின்னணியில் பாஜக இருக்கிறது" என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று சந்தித்து பேசினர்.