டிரெண்டிங்

2ஜி தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

2ஜி தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

webteam

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியாகியுள்ள 2ஜி வழக்கு தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை வைத்துள்ளார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய 2ஜி முறைகேடு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியது. இதில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உட்பட வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஓ.பி.சைனி காலை 10.45 மணியளவில் இந்த தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டார். .

இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 2ஜி வழக்கில் டெல்லி சிபிஜ நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உடனடியாக மேல்முறையீடு செய்து, தனது நேர்மைத் தன்மையை நிரூபிப்பது அவசியம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் சிறை செல்வார்கள் என்று சில மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.