சுந்தர் பிச்சை முகநூல்
டிரெண்டிங்

டெக் உலகில் தடம் பதித்த Google CEO சுந்தர் பிச்சை பிறந்த நாள் இன்று!

இந்தியாவில் பிறந்து, தற்போது அமெரிக்காவில் தனது திறமையாமல் தடம்பதித்துவரும் டெக் நாயகன் சுந்தர் பிச்சைக்கு இன்று பிறந்தநாள்.

ஜெனிட்டா ரோஸ்லின்

பிறப்பும் கல்வியும்!

ஜூன் 10, 1972 ஆம் ஆண்டு, தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமிக்கும் பிறந்தவர் சுந்தர் பிச்சை. தற்போது 52 வயதாகும் சுந்தர்பிச்சை, தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.

தனது மேற்படிப்பினை ஐ.ஐ.டி.கரக்பூரில் உலோகப்பொறியியல் பயின்ற இவர் ஸ்டாம்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளறிவியம் பட்டம் பெற்றுள்ளார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியல் துறையில் எம்.எஸ் முடித்த சுந்தர் பிச்சை, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் எம்பிஏ முடித்தார்.

தனது வாழ்க்கையின் பெரும் நாட்களை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஆல்டோஸில்தான் கழித்திருக்கிறார் சுந்தர். காரணம், அங்குள்ள உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் தலைமை நிர்வாக அதிகாரி இவர்தான்!

பணி வாழ்க்கை!

தனது முதல் வேலையை மெக்கன்சி கம்பெனியில் ஆலோசகராக தொடங்கிய இவர், Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார்.

இதன்பிறகு, ஏப்ரல் 26 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளரானார். இதுதான் இவரின் வாழ்க்கையே புரட்டிபோட்ட தருணம். கூகுளின் வளர்ச்சிக்கு இவரின் தன்னிகரில்லா உழைப்பு முக்கிய காரணம். கூகுள் டூல்பார், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காக தன் முழு உழைப்பையும் இறக்கியுள்ளார்.

இப்படி இவர் திறைமையின் சிதறல்களில் வந்த கூகுள் குரோமானது, பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற போட்டியாளர்களை ஓரம்கட்டி விட்டு உலகின் நம்பர் 1 தேடல் இடமாக மாறியது என்பதுதான் உண்மை.

புகழின் உச்சியை அடைந்தது எப்படி?

இதன் வெற்றியை தொடர்ந்துதான் உலகம் போற்றும் மனிதானாக மாறினார் சுந்தர் பிச்சை. 2017-ல் ஆகஸ்ட் மாதம், பாலினப் பாகுபாடற்ற பணிச்சூழலை உருவாக்க வேண்டும் என்ற கூகுளின் கொள்கையை எதிர்த்த கூகுள் பணியாளரை அதிரடியாக வேலையை விட்டு நீக்கினார், சுந்தர் பிச்சை.

லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருவரும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முடிவெடுத்த சூழலில், கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைவராக சுந்தர் பிச்சையே பொறுப்பேற்றார்.

தொடர்ந்து ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் உருவெடுத்தார். இதன்விளைவாக ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் முக்கிய பங்குகள் சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவில் ஒரு சிறு பகுதியில் பிறந்த இவர், தற்போது தனது திறமையால் தனக்கென ஒரு அங்கீகாரத்தை தொழில்நுட்ப துறையில் உருவாக்கி பெரும் தொழிலதிபர்கள் நிறுவனர்கள் பங்குவகிக்கும் பணக்காரப்பட்டியலில் தற்போது இடம்பெற்றுள்ளார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து தற்போது உலகம் போற்றும் மனிதனாகவும், தமிழர்கள் பலரின் முன்னோடியாகவும் திகழ்ந்துவரும் இவருக்கு இன்று பிறந்த நாள்! வாழ்த்துக்கள்.