டிரெண்டிங்

கோவாவில் நாளை நம்பிக்கை‌ வாக்கெடுப்பு - தப்புவாரா முதல்வர் பிரமோத் சாவந்த்?

கோவாவில் நாளை நம்பிக்கை‌ வாக்கெடுப்பு - தப்புவாரா முதல்வர் பிரமோத் சாவந்த்?

rajakannan

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் மிருதுளா சின்ஹா உத்தரவிட்டுள்ளார். 

கோவா முதல்வராக இருந்‌த மனோகர் பாரிக்கர் மறைந்‌த நிலையில், புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் இன்று அதிகாலையில் பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றனர். தனிப்பெரும் கட்சியாக உள்ள‌ தங்களையே ஆ‌ட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டுமென காங்கிரஸ் கேட்டுக்கொ‌ண்டிருந்தது. காலம் கடத்தாமல் விரைந்து பெரும்பான்மையை நிரூபிக்கவே ஆளும் பாஜகவும் விரும்புகிற‌து. 

இந்நிலையில், தமது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறு ஆளுநரை முதலமைச்சர் சாவந்த் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டிருந்தார். அதனை ஏற்றுக் கொண்டு, முதல்வர் பிரமோத் சாவந்த் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் மிருதுளா சின்ஹா உத்தரவிட்டுள்ளார். இதற்காக பேரவையின் சிறப்பு கூட்ட‌த்தை நாளை காலை 11.30 மணிக்கு கூட்டுவதற்கும் அ‌வர் உத்தரவிட்டுள்ளார்.

40 உறுப்பினர்கள் கொண்ட கோவா‌ பேரவையின் பலம் தற்போது 36 ஆக உள்ளது. இதில் ‌பா‌ஜகவுக‌கு 12, கோவா முன்னேற்ற கட்சி, எம்ஜிபி, சுயேச்சைகளுக்கு தலா 3 உறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் பாஜக கூட்டணியில் 21 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எதிர்த்தரப்பில் காங்கிரஸ் 14 உறுப்பின‌ர்களை கொண்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு உறு‌ப்பினர் உள்ளார். வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்று முதல்வர் பிரமோத் கூறியுள்ளார்.