டிரெண்டிங்

குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம்: தேர்தல் ஆணையம்

குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம்: தேர்தல் ஆணையம்

rajakannan

குற்றப்பின்னணி உடைய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

குற்றப்பின்னணி உடைய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாஜக தலைவர் அஷ்வினி உபத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தான விசாரணை நடைபெற்று வருகிறது.

நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் நவின் சின்ஹா தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, வாழ்நாள் தடை விதிக்கலாமா அல்லது வேண்டாமா என்ற ஏதேனும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? என்று நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திற்கு கேள்விகளை முன் வைத்தனர். இதனையடுத்து, குற்றப்பின்னணி உடைய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும், வாழ்நாள் தடை விதித்தால் மட்டும்தான் அரசியலில் இருந்து குற்றச் செயல்களை குறைக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து, எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் ஓராண்டிற்குள் முடிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது உள்ள சட்டத்தின்படி குற்றப்பின்னணி உறுதி செய்யப்பட்ட எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் வரை தடை விதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.