டிரெண்டிங்

மெகபூபா முஃப்தி V/S கௌதம் காம்பீர் - ட்விட்டரில் வலுக்கும் வார்த்தை போர்

மெகபூபா முஃப்தி V/S கௌதம் காம்பீர் - ட்விட்டரில் வலுக்கும் வார்த்தை போர்

webteam

காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி மற்றும் பாஜகவில் இணைந்துள்ள கௌதம் காம்பீர் ஆகியோர் இடையே ட்விட்டரில் வார்த்தை போர் வலுத்து வருகிறது.

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வழக்கம். அந்தவகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீர் கௌதம் காம்பீர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இவருக்கும் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லாவிற்கும் ட்விட்டரில் ஏற்கெனவே காஷ்மீர்  விவகாரம் குறித்து வார்த்தை போர் நிலவி வந்தது.

இந்நிலையில் தற்போது காம்பீர் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி ஆகியோர் இடையே ட்விட்டரில் வாக்குவாதம் எழுந்துள்ளது. மெகபூபா முஃப்தி பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர், “அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டால் இந்தியாவிற்கும் காஷ்மீருக்கும் இடையேயான தொடர்பு முறிந்துவிடும். 
மேலும் இந்தியர்கள் காஷ்மீர் வரலாற்றில் காணமால் போவார்கள். அத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டம் காஷ்மீரில் செல்லாது” எனப் பதிவிட்டிருந்தார். அதற்கு காம்பீர், “இந்தியர்கள் உங்களை மாதிரி கறையல்ல காணமல் போவதற்கு” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மெகபூபா முஃப்தி, “உங்களின் அரசியல் பிரவேசம் கிரிக்கெட் ஆட்டத்தை போல் படுபாதாளமாக இருக்காது 
என நம்புகிறேன்” எனப் பதிவிட்டார். இதற்கு காம்பீர், “என்னுடைய ட்வீடிற்கு பதிலளிக்கவே உங்களுக்கு பத்து மணிநேரம் பிடித்துள்ளது. இதனால்தான் உங்களால் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடியவில்லை” எனக் கூறினார்.

இதனையடுத்து மெகபூபா முஃப்தி, “உங்களுடைய மனநிலை குறித்து எனக்கு கவலையாக உள்ளது. என்னை பலர் ட்ரோல் செய்துள்ளனர். ஆனால் யாரும் இந்த அளவிற்கு பின் தொடர்ந்ததில்லை. உங்களுடைய 2 ரூபாய் ட்ரோலை இனியும் பொருத்துக்கொள்ள முடியாது” எனக் கூறி காம்பீரை ட்விட்டரில் தடை செய்துள்ளார். 

இந்நிலையில் காம்பீர் தற்போது, “மெகபூபா முஃப்தி என்னை எளிதில் தடை செய்துவிடலாம். ஆனால் 13 கோடி இந்தியர்களை அவரால் எளிதில் ப்ளாக் செய்ய முடியாது. அத்துடன் உங்களை மாதிரி இரக்கமற்ற மனிதரால் ப்ளாக் செய்யப்பட்டதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் தற்போதும் நிலவும் அலையில் நீங்கள் இல்லையென்றால் மூழ்கிவிடுவீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.