கொடுங்கையூரில் 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கி பலியானதற்கு அரசு மற்றும் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் பலியானதை விபத்து என்று சொல்லாமல், கொலை என்று சொல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். அத்துடன் இந்த சம்பவத்திற்கு மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் மழைக்காலங்களில் மற்ற துறைகளை விட மின்துறையில் அதிகப்படியான முன்னெச்சரிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த சம்பவம் நடைபெற்றிருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்களின் பிரச்னைகளை கவனிக்காமல் முதலமைச்சரும், அமைச்சர்களும் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்வது அலட்சியப்போக்கை வெளிக்காட்டுவதாக கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அவர் வலியுறுத்தியுள்ளார்.