டிரெண்டிங்

இந்துத்துவா பார்வைக்கு எதிரானது கீழடி: ஜி.ராமகிருஷ்ணன் கருத்து

webteam

இந்துத்துவாவின் பார்வைக்கு எதிரானது என்பதால் கீழடி ஆய்வு நிறுத்தப்படுவதாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்
குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கீழடி ஆய்வை கைவிடும் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர் தெவித்துள்ளார். 

கீழடி 4ம் கட்ட பணிகள் நிறுத்தப்பட உள்ளதாக செய்திகள் வந்தபடி உள்ளன. ஆய்வுக்காகத் தோண்டிய குழிகளை மூடும் வேலைகள் மிக வேகமாக நடந்து வருவதாக
கூறப்படும் நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  கீழடி அகழ்வாய்வு இந்துத்துவா வரலாற்றுப் பார்வைக்கு நேர்மாறாக இருக்கின்றது.
பழங்காலத்தில் சாதிகள் இல்லை என்பது கீழடி மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்துத்துவாவின் பார்வைக்கு மாறான தகவல்கள் வெளியாவதன் காராணமாகவே பா.ஜ.க
இந்த அகழ்வாய்வை கைவிடுகின்றது. இந்த மோசமான முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.