நண்பர்கள் யாரேனும் இன்ஜினியரோ இல்லை வேறு ஏதேனும் துறையில் தேர்ந்தவராக இருந்தால் அவரை எப்படியாவது எதாவது ஒரு வகையில் பயன்படுத்திக்கொள்ளும் நிகழ்வு ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
அவ்வகையில், திருமணமாகப் போகும் பெண் ஒருவர் தனது கல்யாண பத்திரிகையை டிசைன் செய்து தரும்படி அவரது கிராஃபிக் டிசைனரான நண்பரிடம் கேட்டிருக்கிறார்.
அந்த நண்பர் எந்த மனநிலையில் இருந்தாரோ எனத் தெரியவில்லை, தோழியின் திருமண பத்திரிகையை ஏதோ மைக்ரோசாஃப்ட் word-ல் அச்சடிப்பது போல snowflake போன்ற background-ல் Times New Roman எழுத்து வடிவத்தில் ரொம்பவே சாதாரணமாக டிசைன் செய்துக் கொடுத்திருக்கிறார்.
அந்த பத்திரிகை Reddit தளத்தில் weddingshaming என்ற பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. அதில், “கிராஃபிக் டிசைனிங் படிக்கும் தனது நண்பரிடம் திருமணமாகப் போகும் பெண் ஒருவர் பத்திரிகை டிசைன் செய்து தரச் சொல்லி கேட்டிருக்கிறார்.
இதற்கு, கணினி அறிவில் அத்தனை சிறப்பாக இருக்காத மணப்பெண்ணின் அம்மாவே சில wedding இணையதளங்களை பார்த்து நன்றாக டிசைன் செய்திருப்பார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவு ரெடிட் தளத்தில் வைரலாக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஏராளமானோர் அதன் பதிவிற்கு கமெண்ட்டும் செய்திருக்கிறார்கள். அதில் 10 ஆண்டுகளாக கிராஃபிக் டிசைனராக இருக்கு பயனர் ஒருவர் இந்த இன்விட்டிஷேசன் பார்ப்பதற்கு காலேஜ் நண்பரின் முதல் செமஸ்டருக்கு செய்தது போல இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, “அந்த டிசைனர் தனது டிகிரியை முடிக்கும் வரை மணப்பெண் காத்திருந்திருக்கலாம்” என்று ஒருவரும், “பத்திரிகை டிசைன் செய்ய தோழி காசு கொடுத்திருக்கமாட்டார் போல. அந்த அதிருப்தியில்தான் இப்படி செய்திருக்கிறார்” மற்றொருவரும் நக்கல் செய்திருக்கிறார்கள்.