டிரெண்டிங்

மகிளா காங்கிரஸ் பொறுப்பிலிருந்து நக்மா நீக்கம் - குஷ்பு அரசியலா?

webteam

தமிழக மகிளா கங்கிரஸின் புதிய பொறுப்பாளராக ஃபாத்திமா ரோஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் என்பது வழக்கமானதுதான். அதன்படி, நக்மா மற்றும் குஷ்பூ இடையே அரசியல் மோதல்
இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவருமே மக்களவை தேர்தலின் போது சென்னையில் போட்டியிடும் திட்டத்தில் இருந்ததாகவும்,
இதனால் இருவரும் முரண்பாடுடன் செயல்பட்டு வந்ததாகவும் காங்கிரஸ் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கு பின்னால்
தமிழக காங்கிரஸின் சில மூத்த தலைவர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சி
ராணியுடனும் நக்மாவிற்கு அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் தற்போது தமிழக மகிளா காங்கிரஸின் புதிய பொறுப்பாளராக ஃபாத்திமா ரோஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு
முன் அந்தப் பொறுப்பில் இருந்த நக்மா விடுவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர்
சுஷ்மிதாதேவ் பிறப்பித்துள்ள உத்தரவு கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு பின்னணியில் குஷ்புவின் அரசியல் இருப்பதாக
அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.