Anju-Facebook -  Twitter
டிரெண்டிங்

“என் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர்” - முகநூல் நண்பரை தேடி பாகிஸ்தான் சென்ற பெண்ணின் தந்தை அதிர்ச்சி!

இந்தியாவை சேர்ந்த அஞ்ஜு என்ற பெண் தனது முகநூல் நண்பரான நஸ்ருல்லாவை சந்திப்பதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளார். இதனை அறிந்த இப்பெண்ணின் தந்தை, “எனது மகள் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். அவளை நான் சந்தித்தே பல நாட்கள் ஆகின்றது” என்று கூறியுள்ளார்.

PT WEB

உத்தரபிரதேசத்தில் உள்ள கைலோர் கிராமத்தில் பிறந்தவர் அஞ்ஜு (34). இவர் தற்போது ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த 29 வயதான நஸ்ருல்லாவும் 2019 இல் பேஸ்புக்கில் நண்பர்களாக இருந்துள்ளனர். திருமணம் ஆன இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. தனது முகநூல் நண்பரான நஸ்ருல்லாவை சந்திப்பதற்காக பாக்கிஸ்தானில் உள்ள உள்ள அப்பர் டிர் மாவட்டத்திற்கு அஞ்சு பயணம் செய்துள்ளார்.

Anju- India to Pakistan

இதனை அறிந்த அஞ்ஜூவின் தந்தை கயா பிரசாத் தாமஸ்  செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது வீடு காலியாக உள்ளதால் நான் தற்போது எம்.பி. கிராமத்தில் தங்கியுள்ளேன். நான் அவ்வப்போதுதான் ஃபரிதாபாத்தில் இருந்து இங்கு வருகிறேன். பாகிஸ்தானில் அஞ்ஜூ இருப்பது நேற்றுதான் எனக்கு தெரியவந்தது.அஞ்ஜூவின் சகோதரன் கூறித்தான் அவர் பாகிஸ்தான் சென்றிருப்பது எனக்கு தெரியும். அஞ்ஜூ திருமணமாகி ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்திற்கு சென்ற பிறகு கடந்த 20 ஆண்டுகளாக அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவரை ஒருபோதும் தெக்கன்பூர்க்கு நான் அழைக்கவுமில்லை. அஞ்ஜூ மன உளைச்சலுக்கு ஆளாகி மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்” என்று கூறினர்.

மேலும், அவர் கூறுகையில், “அஞ்ஜு மூன்று வயதிலிருந்தே உத்தரபிரதேசத்தில் உள்ள ஜலான் மாவட்டத்தில் அவளது  தாய் மாமா உடன் தான் தங்கியிருந்தாள். 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு அதன் பிறகு ஒரு நிறுவனத்தில்  வேலை செய்து வந்தார், அங்கு வசிக்கும் போதே  திருமணம் செய்துகொண்டார்” என்றார்.

தனது மகள் மற்றும்  மருமகன் பற்றி அவர் கூறுகையில், ”எனது மருமகன் மிகவும் எளிமையானவர்.  விசித்திரமானவள் என் மகள். ஆனால், என் மகள் அந்த முகநூல் தோழனுடன் எந்த தொடர்பும் வைத்திருக்கமாட்டாள். இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “அவளுடைய விசித்திரமான குணத்தால் நான் அவளை விட்டு தனியாக வந்தேன். யாருக்கும் தெரிவிக்காமல் பாகிஸ்தானுக்கு அவள் சென்றது தவறு. அவளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் தந்தையுடன் இருக்கிறார்கள். அவளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவள் எப்போது பாகிஸ்தானுக்குச் சென்றாள் என்பதே எனக்குத் தெரியாது, ”என்று அவர் கூறினார்.

Anju- Visa

இது ஒருபுறம் இருக்க அஞ்ஜுவின் முகநூல் நண்பரான நஸ்ருல்லா, குல்ஷோ கிராமத்தில் இருந்து தொலைபேசியில்  வாயிலாக PTI க்கு கூறுகையில், ”அவர் என்னை பார்ப்பதக்காகவே இங்கு வந்தால். நங்கள் திருமணம் செய்யும்  திட்டத்தில் ஒன்றும் இல்லை. அஞ்ஜுவின் தந்தை, அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் மற்றும் விசித்திரமானவர் என்று கூறும் அளவுக்கு அவர் எந்த விவகாரத்திலும் ஈடுபடவில்லை. விசா காலாவதியான பிறகு ஆகஸ்ட் 20 ஆம் தேதி அவர் இந்தியாவிற்க்கு  திரும்பி வந்துவிடுவார். அஞ்ஜு எனது வீட்டில் உள்ள ஒரு தனி அறையில் எனது குடும்பத்தின் மற்ற பெண் உறுப்பினர்களுடன் வசித்து வருகிறார்” என்று கூறினார்.

நஸ்ருல்லாவின் கருத்தை மீண்டும் வலியுறுத்திய அஞ்ஜூ, தனது ஃபேஸ்புக் நண்பரை திருமணம் செய்து கொள்வதற்காக தான் பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றும், ஊடகங்கள் தேவையற்ற பரபரப்புகளை உருவாக்கிவிட்டதாகவும் கூறினார்.

மேலும், ”விசா ஆவணங்களின்படி அவர் நிச்சயமாக ஆகஸ்ட் 20 அன்று திரும்பி தன் நாட்டிற்கே அனுப்பி வைக்கப்படுவார்” என்று அப்பர் டிர் மாவட்ட காவல்துறை அதிகாரி (டிபிஓ) முஷ்டாக் கான் கூறினார். அவர் ஞாயிற்றுக்கிழமை தனது அலுவலகத்தில் அஞ்ஜூவை நேர்காணல் செய்து அவரது பயண ஆவணங்களை சரிபார்த்தார், அதன் அடிப்படையில் அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

- Jenetta Roseline