'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை' மூலம் பெறப்படும் பொருளுதவியும் நிதியுதவியும் தமிழகம் முழுவதும் ஏராளமான ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னையைச் சேர்ந்த 15 குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் அரிசி, திங்கள்கிழமை வழங்கப்பட்டது. கொளத்தூர், கொடுங்கையூர் பகுதியில் மல்லிகா, இப்ராஹிம், பானு உள்ளிட்ட 6 குடும்பங்களுக்கும், வியாசர்பாடி, கொருக்குபேட்டை, கொரட்டூர், புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்த வந்த அழைப்புக்கள் என சுமார் 15 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் நேரில் வழங்கப்பட்டன.
அதேபோல், ஒரே நாளில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நிதி வழங்கி பலரும் உதவிக்கரம் நீட்டினர். சென்னை நோலம்பூர் பகுதியை சேர்ந்த பிள்ளையார் என்பவர் ரூ.10,000 காசோலையை வழங்கினார்; பெங்களூரைச் சேர்ந்த மணிவண்ணன் ரூ.20,000, சென்னையை சேர்ந்த ரங்கராஜன் ரூ.15,000, செந்தில் குமார் ரூ.10,000 வழங்கினர். இவர்கள் மூலம் பெற்ற நிதி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை 'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை' மூலம் நிறைவேற்றப்படும்.
- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு தினமும் வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகள் பலவும் உணவின்றி தவிப்போரின் ஏழைக் குடும்பங்களாகவே இருக்கின்றன. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.