டிரெண்டிங்

மன்சூர் அலிகான்; பவர் ஸ்டார் சீனிவாசன் நிலை என்ன?

webteam

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகளை தாண்டி மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் பல தொகுதிகளில் கனிசமான வாக்குகளை பெற்று கவனம் பெற்றுள்ளன.

இந்நிலையில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மன்சூர் அலிகான் பிரச்சாரங்களின் அதிக கவனம் பெற்றார்.  சாலையில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றியும், ஷூ பாலீஷ் செய்தும், மூட்டைகளை சுமந்தும், டீ ஆற்றியும், இளநீர் கடையில் இளநீர் வெட்டி குடுப்பதும், கீரை விற்றும் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில்  தேர்தல் முடிவுகளின்படி மன்சூர் அலிகான் 54957 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அதேபோல் தென்சென்னையில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், வெறும் 670 வாக்குகள் பெற்று பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார். கோவையை பொறுத்தவரை மார்க்சிஸ்ட், பாஜக பிரதான கட்சியாக மோதியது. இதில் மார்க்சிஸ்டை சேர்ந்த பி.ஆர். நடராஜன் வெற்றி முகத்தில் உள்ளார். 

ஆனாலும் சமீபத்தில் அரசியலில் நுழைந்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் கட்சியைச் சேர்ந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த டாக்டர் மகேந்திரன் அதிகம் கவனம் பெற்றுள்ளார். கோவை தொகுதியில் மகேந்திரன் 144808 வாக்குகளை பெற்றுள்ளார். வெற்றியடையவில்லை என்றாலும் குறுகிய காலத்துக்குள் கணிசமான வாக்குகளை பெற்ற மகேந்திரனுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.