டிரெண்டிங்

“தமிழகத்தில் இதுவரை 122 கோடிக்கு மேல் பறிமுதல்” - சத்யபிரதா சாஹூ

“தமிழகத்தில் இதுவரை 122 கோடிக்கு மேல் பறிமுதல்” - சத்யபிரதா சாஹூ

webteam

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துது முதல் இதுவரை 122 கோடியே 29 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களிலுள்ள 91 தொகுதிகளில் முதற்கட்டத் வாக்குப்பதிவு நாளை மறுநாள் தொடங்குகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும்படையினர், நாடு முழுவதும் சோதனைகளில் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்டதாக நேற்று ஒரே நாளில் மட்டும் 8 கோடியே 62 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 122 கோடியே 29 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் 230 கோடி ரூபாய் மதிப்பிலான 812 கிலோ தங்கம், 482 கிலோ வெள்ளி நகைகளும், 33 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.இதனிடையே தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, இந்தியாவிலேயே, தமிழகத்தின் தான் அதிக அளவில் பணமும், தங்கமும் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது.