டிரெண்டிங்

வருவாய் புலனாய்வு அமைப்புகள் நடுநிலை தன்மையுடன் செயல்பட வேண்டும் - தேர்தல் ஆணையம்

வருவாய் புலனாய்வு அமைப்புகள் நடுநிலை தன்மையுடன் செயல்பட வேண்டும் - தேர்தல் ஆணையம்

webteam

சோதனை நடத்தும் போது மத்திய நிதி அமைச்சகத்தின் கீழுள்ள வருவாய் புலனாய்வு அமைப்புகள் ஒருதலை பட்சமாக செயல்படக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறித்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல தேர்தல் ஆணையமும் தேர்தலை ஊழலற்ற முறையில் நடத்த ஆயத்தமாகி வருகிறது. இதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு தேர்தல் நேரங்களில் வருமானவரி துறை ஒரு தலை பட்சமாக செயல்படுகிறது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் வருவாய் புலனாய்வு அமைப்புகளுக்கு அறிவிப்பு ஒன்றை அறிவுறுத்தியுள்ளது. அதில், “தேர்தல் நேரங்களில் பணப்பட்டுவாடா பிரச்னை அதிகமாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் புலனாய்வு அமைப்புகள் சோதனை நடத்துகின்றன. எனினும் தேர்தல் காலங்களில் இதுபோன்ற சோதனைகளில் ஈடுபடும் போது நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும். அதேபோல தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது சந்தேகப்படும் படி பணபரிவர்த்தனை நடைபெற்றால் அதனை தலைமை தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.