டிரெண்டிங்

தேர்தல் நடத்தை விதி: காந்தி சிலையை துணியால் மூடியதால் மதுரையில் பரபரப்பு

தேர்தல் நடத்தை விதி: காந்தி சிலையை துணியால் மூடியதால் மதுரையில் பரபரப்பு

kaleelrahman

மதுரையில் தேர்தல் நடத்தை விதிகள் எனக்கூறி மகாத்மா காந்தி சிலையை துணியால் மூடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆங்காங்கே உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் உருவங்கள் அழிக்கப்பட்டதோடு, சிலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில் அரசியல் தலைவர் எனக்கூறி மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலையை தேர்தல் அலுவலர்கள் மூடியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசத்தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் வகையில் இது போன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் காந்தி சிலை அருகே உள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சிலையும் மூடப்பட்டது. இதற்கு அந்த பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து அவர்களே சிலையை மூடியிருந்த துணியை அகற்றியுள்ளனர். ஆனால் மகாத்மா காந்தியின் சிலையை மூடியுள்ள துணியை அகற்றாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.