டிரெண்டிங்

மூன்று மாநிலங்களில் ஓய்ந்தது தேர்தல் பரப்புரை! - என்னென்ன கட்டுப்பாடுகள் ?

மூன்று மாநிலங்களில் ஓய்ந்தது தேர்தல் பரப்புரை! - என்னென்ன கட்டுப்பாடுகள் ?

jagadeesh

தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது. அரசியல் கட்சிகளின் பரப்புரை ஓய்ந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.

என்னென்ன கட்டுப்பாடுகள் ?

தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது வேறு எந்த எலெக்ட்ரானிக் பொருட்கள் மூலமாகவோ, பரப்புரைகளை வெளியிடக்கூடாது. மீறினால் 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். தொகுதிக்கு தொடர்பில்லாத வெளியாட்கள் அனைவரும், தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

தொகுதியின் வாக்காளர் அல்லாதவர்கள், வெளியேறிவிட்டார்களா என்பதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்வர். குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர், வேறு தொகுதியில் வாக்காளராக இருந்தால், அவரை வெளியே செல்ல கட்டாயப்படுத்தக்கூடாது. அதேநேரத்தில் அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடக்கூடாது.

தேர்தல் நாளில், ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி பெற முடியும். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர வேட்பாளர்களும், அவர்களது முகவர்களும் வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. வாக்குச்சாவடி இருக்கும் இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால், தேர்தல் நாள் பணிகளுக்காக தற்காலிக பூத் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளலாம். அங்கு உணவுப் பொருட்கள் எதுவும் வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

  • தலைவர்கள், வேட்பாளர்கள், கட்சியினர் 7 மணிக்கு மேல் எவ்வகையிலும் பரப்புரை செய்யத் தடை
  • ஊடகங்கள், சமூக தளங்களிலும் விளம்பரங்கள் மூலமாக பரப்புரை மேற்கொள்ளத் தடை
  • வாக்கு சேகரிக்கும் நோக்கில் தனிப்பட்ட சந்திப்புகளையும் கட்சியினரும் வேட்பாளர்களும் மேற்கொள்ளக் கூடாது
  • பரப்புரை நிறைவடைந்த நிலையில் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது
  • தொகுதிக்கு தொடர்பில்லாத ஆட்கள் உடனடியாக வெளியேற வேண்டும்
  • ஓட்டல்கள், விடுதிகள், திருமண மண்டபங்களில் அதிகாரிகள் சோதனை நடத்துவர்
  • பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு; வாகன சோதனையும் தீவிரம்
  • தமிழகமெங்கும் டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடப்பட்டன
  • தொலைக்காட்சி, வேறு எந்த எலக்ட்ரானிக் பொருட்கள் மூலமும் பரப்புரைகளை வெளியிடக்கூடாது
  • தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்
  • வேட்பாளர் வேறு தொகுதி வாக்காளராக இருந்தால், அவரை வெளியே செல்ல கட்டாயப்படுத்தக்கூடாது
  • தேர்தல் நாளில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி பெற முடியும்
  • வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர வேட்பாளர்கள், முகவர்கள் வாகனங்களை பயன்படுத்தக்கூடாது
  • வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தொலைவில் தேர்தல் நாள் பணிக்கு தற்காலிக பூத் அமைக்கலாம்
  • தேர்தல் நாள் பணிக்கான பூத்தில் உணவுப் பொருட்கள் எதுவும் வழங்கக்கூடாது