டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: மூதாட்டிக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய நாட்டுப்புறக் கலைஞர்

நிவேதா ஜெகராஜா

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் கொரோனாவால் வருவாயின்றி தவித்த மூதாட்டிக்கு, புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை மூலம் உதவி வழங்கப்பட்டது.

மூதாட்டி உமா, தொலைபேசி மூலம் புதிய தலைமுறையிடம் உதவி கோரியிருந்தார். அவருக்கு நாட்டுப்புறக் கலைஞர் ஆல்பர்ட் ராஜா, அரிசி மற்றும் தேவையான மளிகை பொருட்களை வழங்கியுள்ளார். இயல்பு நிலை திரும்பும் வரை மூதாட்டிக்கு மாதம் ஒருமுறை அத்தியாவசியப் பொருட்கள் வழங்கவும் ஆல்பர்ட் ராஜா முன்வந்துள்ளார்.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகளில் ஒன்றுக்கு செய்யப்பட்டிருக்கும் சிறு உதவி இது. எங்களின் இந்த எளியவர்களை கரை சேர்க்கும் பணியில், எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'