டிரெண்டிங்

இடையூறுகளை தகர்த்து லட்சியத்தை அடைவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

webteam

எத்தனை இன்னல்கள், இடையூறுகள் வந்தாலும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் கனவுகளை நிறைவேற்றுவது அதிமுகவினரின் லட்சியம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் 100 அடி உயர கொடிகம்பத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கொடியேற்றி வைத்து பேசினார், அப்போது, எத்தனை இன்னல்கள், இடையூறுகள் வந்தாலும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் கனவுகளை நிறைவேற்றுவது அதிமுகவினரின் லட்சியம் என்று கூறினார்.

விழாவில் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு துணை முதலமைச்சரும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு இல்லை என்று சர்ச்சை எழுந்தது. இரட்டை இலை சின்னம் கிடைத்தபிறகு நடைபெற்ற முதலாவது நிகழ்ச்சியான இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என சமீபத்தில் நாடாளுமன்ர உறுப்பினர் மைத்ரேயன் முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் அழைக்கப்படாதது குறித்து அவரது ஆதரவாளர்கள் புகார் தெரிவித்த நிலையில், ஓ.பி.எஸ். பெயருடன் கூடிய புதிய கல்வெட்டு விழா நடைபெற்ற இடத்தில் நிறுவப்பட்டது.