டிரெண்டிங்

பொறுப்பை தட்டிக் கழிப்பது ஆளுநரின் பதவிக்கு உகந்தது அல்ல: துரைமுருகன்

பொறுப்பை தட்டிக் கழிப்பது ஆளுநரின் பதவிக்கு உகந்தது அல்ல: துரைமுருகன்

Rasus

தற்போது நடப்பது அதிமுக-வின் உட்கட்சி விவகாரம் எனக் கூறி பொறுப்பை தட்டிக் கழிப்பது ஆளுநரின் பதவிக்கு உகந்தது அல்ல என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்கின்ற போது ஓபிஎஸ் பக்கம் 9 எம்எல்ஏ-க்கள் தான் இருந்தனர். அப்போதே மெஜாரிட்டியை நிரூபிக்க சொன்ன நீங்கள், 120 எம்எல்ஏ-க்கள் எதிர்க்கட்சிகள் பக்கம் நிற்கும் போது மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டாமா என அப்போதே ஆளுநரிடம் கேட்டேன். என்னிடத்தில் பார்க்கிறேன் என்று தான் ஆளுநர் கூறினார். இப்போது உட்கட்சி பிரச்னை, மாமன் மச்சான் சண்டை என சொல்வது அவரது பொறுப்புக்கு உகந்தது அல்ல " என்றார்.