டிரெண்டிங்

இப்ப இருக்க விலை எங்க? அப்போ வித்த விலை எங்க? - 80களில் விற்கப்பட்ட புல்லட் பைக் விலை இதோ!

இப்ப இருக்க விலை எங்க? அப்போ வித்த விலை எங்க? - 80களில் விற்கப்பட்ட புல்லட் பைக் விலை இதோ!

JananiGovindhan

வீட்டுக்கு ஒரு இன்ஜினியர் இருப்பது போல ராயல் என்ஃபீல்டு பைக் வைத்திருக்காதவர்களை காண்பதே அரிதுதான் என்பது போல அந்த வண்டியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அத்தனை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

ஆனால் ஒரு காலத்தில் இதே ராயல் என்ஃபீல்டை ஊருக்குள் ஒருவர் வைத்திருந்தாலே அவர் பார்த்து ஆச்சர்யப்படாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் மீதான மோகமும் மவுசும் அத்தனை பேரிடமும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

தற்போதை காலகட்டத்தில் வெறும் முன் பணமாக 5,000 செலுத்திவிட்டு மாத தவணை முறையில் பணம் கட்டினால் போதும் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்குள்ளாகவே டெலிவரி செய்யப்பட்டு விடுகிறது. அதுவும் கிளாசிக் ரக ராயல் என்ஃபீல்டு வண்டிகளெல்லாம் ex-showroom விலையே கிட்டத்தட்ட இரண்டு லட்சத்தை தாண்டிவிடும்.

ஆனால் இதே கிளாசிக் ரக ராயல் என்ஃபீல்டு விலை 80’களின் காலகட்டத்தில் எவ்வளவாக இருந்திருக்கும் என்று நினைப்பீர்கள்? அதற்கான விடையைதான் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலான என்ஃபீல்டு வண்டியின் ரசீது கொடுத்திருக்கிறது.

அதன்படி 1986ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி வாங்கப்பட்ட என்ஃபீல்டு 350 cc ரக புல்லட் பைக்கின் விலை வெறும் 18 ஆயிரத்து 700 ரூபாயாக மட்டுமே இருந்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயமே 250 ரூபாய் தள்ளுபடி போக அந்த புல்லட் பைக்கின் விலை ரூ.18,700 ஆக இருந்திருக்கிறது என ரசீது மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்த ரசீது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் ராயல் என்ஃபீல்டு புல்லட் வண்டியின் மீதான தங்களது அபிப்பிராயங்களை தெரிவித்து வருகிறார்கள். இதுபோக, 1984ம் ஆண்டு பிப்ரவரி சமயத்தில் வெளியான புல்லட் பைக்கின் விலை 16,100 ரூபாய்தான் என்றும் ஒரு பயனர் பதிவிட்டிருக்கிறார்.

இதுபோக, அந்த காலத்தில் உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீடு ரக பைக்குகள் ரொம்பவே தரம் வாய்ந்ததாக இருக்கும் என்றும், இப்போதைய காலத்தில் அந்த 250 ரூபாய் கூட தள்ளுபடி செய்வதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.